Friday 13 August, 2010

ஊடக அதர்மங்கள்

ஜனநாயகத்தின் நான்காம்தூண் என்று  தன்னை பெருமையாக பேசிக்கொள்ளும் ஊடகங்கள், மற்ற மூன்று தூண்கள் என ஜனநாயகம் குறிப்பிடும் சட்டமன்றம்,நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவை எப்படி தன்னிலை தாழ்ந்து தலைகுனிந்து நிற்கிறதோ "அப்படியே ஆகட்டும்" என்று தானும் சாக்கடையில்  விழுந்து புரள்கிறது.

ஒரு பத்திரிகைகாரனுக்கு இருக்கவேண்டிய நேர்மையும், சமூகத்தில் மலிந்து கிடக்கிற அவலங்களை கண்டு வரவேண்டிய தார்மீக கோபமும் இன்றி புதிய இதழியல் பாணி  இப்போது  எங்கும் பரவலாக காணப்படுகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பதிலிருந்து விலகி  தன் வருவாயை நிலைபடுத்துதல் என்கிற தனிமனிதநோக்கில் குறுகி தேய்ந்து வேறு வகையில் வளர்ந்து நிற்கிறது பத்திரிக்கை தர்மம்.

தன்னை நடுநிலை நாளேடு என்று கட்சிப்பத்திரிகைகளும்
பிரகடனப்படுத்தி கொள்கிற அளவிற்கு இருக்கிறது இப்போதைய நடுநிலை தன்மை.

உண்மையில் இன்றைய பத்திரிகைகள் யாருடைய சிந்தனைகளை, வெளிப்பாடுகளை, மனக்குமுறல்களை, தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுகின்றன ?

மக்களுடையதா? இல்லை .,

இன்னும்  விலைபோகாத சில உண்மையான எழுதுகோல்களின்  உயிர்த்துடிப்போடு வாழ்கிற மானுட காவல் புரியும் நிருபர்களுடையதா? இல்லை.,

 தன்பழுத்த ஞானம் கொண்டு அலசிஆராயும் ஆசிரியருடையதா....?

இதில் எதுவுமே இப்போதைய பெரும்பாலான பத்திரிகைகளின் அளவுகோல் இல்லை.

யதார்த்தத்தில் அவை., தனிப்பட்ட சில முதலாளிகளின்- அதாவது பணம் மட்டுமே குறிக்கோள் உடைய, அப்பத்திரிகையின் நிறுவனர் என தன்னை அடையாளப்படுத்திகொள்ளும் ஒரு வணிகரின் சொந்த விருப்பு வெறுப்புகளின்,சாதக பாதக அளவீடுகளின் லாப நஷ்ட கணக்கீடு.

 ஆளும்தரப்பின் பிரச்சார துண்டறிக்கை என தன் நிலையை மாற்றிக்கொண்டு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஏற்ப அவர்களின் அடிபொடிகளாக மாறி தன் விளம்பர வருவாயை, சலுகைகளை  மட்டும் பாதுகாத்து கொள்ள கடைபிடிக்கிற குறுகிய தந்திரம் மட்டுமே அவை கடைப்பிடிக்கும் பத்திரிக்கை கொள்கை.  

இதையும் மீறி இவர்களுக்குள் இருக்கிற சாதிப்பற்றும் அதன் தொடர்ச்சியும் அதன் விளைவை வெளிப்படுத்தும் விதமும், உள்சண்டையும் முற்றுபெறாத தொடர்கதை...  
நம்புங்கள் .,  இவர்கள்தான்  ஊரை சுத்தப்படுத்த அவதாரம் எடுத்தவர்கள்.

இவர்கள்தான் தெருவோரத்து பிச்சைகாரர்களை கார்ப்பரேட் சாமியார்களாக விசுவரூபம் எடுக்கச்செய்யும் விளம்பர வாகனங்கள்.
உள்ளுர்ப்பொறுக்கிகளை மக்கள் சேவை புரியும் ராபின்குட் மாதிரி கதைபுனையும் மந்திரவாதிகள்.
 தங்களுக்கு ஒளிப்பரப்பு உரிமை விற்காத படங்களை குப்பை என்றும், தங்களின் குப்பைகளை வைரம் என்றும் வரிசைபடுத்தி வியாபாரம் புரியும் நெறிகாக்கும் ஊடகங்கள் .

கருத்து சொன்னால் "ஒ" போட அனுமதிக்க பயப்படும் அளவிற்கு தைரியமுடைய கைப்பாவை குழுமங்கள்.

இவர்கள் சிலநேரங்களில் பொங்கியெழும் போது ஏற்படும் புழுதிகளில் தெரியாமல் போகும் அதன்திரைமறைவில் இவர்கள் நடத்தும் பிளாக்மெயில் பேரங்கள்.


பலநேரங்களில்  ...
கவர்களில் வரும் லெட்சுமி நிருபர்களுக்கு  சந்தோசம் என்றால்., சூட்கேசுகளில் வரும் குபேரன் நிறுவனர்களின் தலைப்புசெய்திக்கு விசயங்களை சேகரிக்கின்றன.

 மொத்தத்தில்.,
 தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனும் முதுமொழிக்கு இவர்கள்தான் சமீபகால  உரிமைதாரார்கள்.

"நிமிர்ந்த நன்நடை ;
நேர்கொண்ட பார்வை ;
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நன்னெறி" 

இது பாரதி கண்ட இதழியல் தர்மம் ....எங்கே இப்போது?

9 comments:

Unknown said...

உடன்பிறப்புகள் அல்லது உடன்பிறப்புகள் சார்ந்த பத்திரிகைகள் துதிபாடவே செய்யும்... நான் இப்பலாம் எந்த பத்திரிகையும் வாங்குறது இல்லை ...

vinthaimanithan said...

சமூகத்தின் புரை ஊடகத்திலும் பிரதிபலிக்கிறது. வேறொன்றுமில்லை. சர்ச்சைகள் இல்லாவிட்டால் சர்க்குலேஷன் இல்லை என்ற நிலைக்கு யார் காரணம்? ஊடகங்களை மட்டும் குற்றம் சொல்லி...? மேலும் ஊடகங்கள் பெருமுதலாளிகள் சம்பாதிக்க இன்னொரு முதலீட்டுத்துறை என்றானபின் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

Anonymous said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

…………………………………..
ஒரு இறைவேதம் என்பது எல்லோராலும் படித்து பின்பற்றத்தக்க வேதமாக இருக்கவேண்டும். அதன் ஒவ்வொரு வசனங்களையும் எங்கு வேண்டுமானாலும் படிக்கலாம் – யாரிடம் வேண்டுமானாலும் படித்துக்காட்டலாம், எப்பொழுது வேண்டுமானாலும் அதன் கருத்துக்களை விளக்கலாம் என்பது ஒரு இறை வேதத்தினுடைய பொது நியதி. இது எல்லா வேதங்களுக்கும் இருக்கப்படவேண்டிய ஒரு பொதுவான தகுதியும் கூட.

புனித பைபிளில் வரும் இந்தவசனங்களை எவராவது தன் குடும்பத்தோடு – குறிப்பாகத் தன் தாய், தந்தை, மகன், மகள் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரோடும் சேர்ந்து படிக்க இயலுமா? சிந்தித்துப் பாருங்கள் சகோதரர்களே! விபச்சார சகோதரிகள் பற்றி சொல்லப்படும் இந்த கதையின் வர்ணனையின் மூலம் கர்த்தர் இவ்வுலக மக்களுக்கு என்ன சொல்ல வருகின்றார்? இதனால் என்ன பயன்?

"க்ளிக்" செய்து படியுங்கள்.

வேசிகள் அடங்காத‌ காமத்துடன்

....................................................
ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? ** ஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா? ** இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது
கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?

Jey said...

இன்றைய ய்தார்த்தம். சாட்டையடி..

இராமநாதன் சாமித்துரை said...

சகோதரர் செந்தில், நண்பர் விந்தைமனிதன்.,

புதிய நண்பர் jey அவர்களுக்கும் மற்றும் முகமறியாத வருகை கரங்களுக்கும் நன்றிகள்.

dheva said...

பத்திரிக்கைகள் மட்டுமல்ல தோழரே..வலைப்பூக்களும் இப்படி மாறிக் கொண்டுதானிருக்கிறது....! ஒவ்வொரு தனிமனிதனும் நல்ல கருத்துக்களை படிப்பேன் மற்றும் ஆதரிப்பேன் என்ற ஒரு நிலை எடுக்க வேண்டும்.....


உங்களின் கட்டுரையில் இருக்கும் தீயை பரவச் செய்வோம் தோழர்!

இராமநாதன் சாமித்துரை said...

வணக்கம் தேவா., நன்றிகள்.

யோகா.... said...

மிகவும் ஆழமான சிந்தனை, இன்றைய நிலையில் எல்லோரும் பணத்தின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறார்கள், மக்களை பற்றி யாரும் நினைப்பதில்லை

இராமநாதன் சாமித்துரை said...

vanakkam yoga, thanks a lot

Post a Comment