Saturday 17 July, 2010

காலப்பிழை..














உன்னைப் பார்த்தபின்
கிளியோபாட்ரா
கண்ணாடி பார்த்திருந்தால்
அந்தக் கோணல்
மூக்குக்காரியின்
கர்வம் செத்திருக்கும்..

நான் மாதவிகளின்
வீடுகளில்  இருந்தபோதும்...
கண்ணகியாய்
என் பெயர் சேர்த்தே உன் பெயர்
அலங்கரித்தாய்..

விமர்சித்த உன்
உறவுகளையும் உதறி
தாட்சாயணியாய் அவதரித்தாய்..

என் ஆத்திரங்களை
உன் பொறுமைகளால் துடைத்தாய் ..
என் வறுமையை
உன் பட்டினியால்
நம் பிள்ளைகளிடம் மறைத்தாய்..

நூற்றாண்டுகளின்
கால இடைவெளியில்
பலர் சரித்திரமானார்கள்...
நீ..!
என் அடுக்களையில்
அடைக்கலமானாய்...

3 comments:

Anonymous said...

இன்றைய தேதிக்கு இப்படிதான் நிறைய பெண்களின் வாழ்வு முடிந்து போகிறது..

காலம் கடந்தபின் ஞானம் பெற்றான் என சொல்லும் கவிதை வாழ்வின் எதார்த்தம்...

யோகா.... said...

நம் வாழ்வின் ஆணிவேர் இவர்கள் தான் ஆணிவேர் கண்களுக்கு தெரிவதில்லை எப்போதும். அது வெளிச்சத்தை விரும்புவதில்லை

498ஏ அப்பாவி said...

அரு​மையாண கவி​தை அன்புச் ச​கோதர​ரே!

ஃபப்பில் குடித்துவிட்டு ​கொட்டம்மடிக்கும் ​பெண்களுக்கு(???) வரிந்துகட்டிக்​கொண்டு வக்காலத்து வாங்க ​​பெண்கள் நல(??) வாரியம் காத்துக்​கொண்டிருக்கின்றது
அ​​​தே சமயம் குடிகார கணவர்களிடம் அடிஉ​தை பட்டு வயற்காட்டில் மாடாய் உ​ழைத்து பிள்​​ளைக​ளை படிக்க ​வைக்க உயி​ரையும் ​கொடுத்து உ​ழைக்கும் என்தாய்​போன்ற ச​கோதரிகளுக்கு ஆதாரவாகவும்
பரிந்து ​பேசவும் இவர்க​ளை காக்க ஒரு நாதியுமில்​லை நம்நாட்டில்...


இது​போல் ஒரு தாய்க்குப்பிறந்து ​அவரின் ​பேச்​சைக்​கேட்காமல் ஒரு ​பெண்உருவில் உள்ள மிருகத்திடம் சிக்கி சின்னாபின்னமானவன்...

அரு​மையாண கவி​தை மற்றும் ​பொறுத்தமான பு​கைப்படம்...

​தொடரட்டும் தங்கள் பணி

என்றும் அன்புடன்,

தங்கள் ச​கோதரன்


498ஏ அப்பாவி

Post a Comment